சென்னை:
கோயம்பேடு மார்க்கெட் கொரோனா கிளஸ்டராக இருந்து வந்துள்ளது உறுதியாகி உள்ளது. இங்கிருந்து பரவிய கொரோனா சென்னை மட்டுமின்றி அண்டையமாவட்ட மக்களையும் பீதிக்குள்ளாகி உள்ளது.
கோயம்பேடு சந்தை மூலமாக 1050பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 77 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக உயர்ந்தது. இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு சந்தை வாயிலாக தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அதுபோல சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 62 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டுமே கொரோனா கட்டுப்பாடு மண்டலங்கள்  419 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கோயம்பேடு அருகே  சின்மயா நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், மதுரைவாயல் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.