திருப்பதி :

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது, முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பின், உற்சவ மூர்த்தியான மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி யுடன், தங்க ரதத்தில் உலா வந்தார்.

பெண்கள் மட்டுமே இந்த ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு, கோயிலில் பணிபுரியும் 200 பெண் ஊழியர்களை கொண்டு தங்க ரதம் இழுத்து செல்லப்பட்டது.

குழுமி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழங்க, 4 டன் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த நான்கு மாட வீதிகள் வழியாக மலையப்ப ஸ்வாமி உலாவந்தார்.