மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 100 பாடகர்கள் பாடிய ‘ஒரே நாடு ஒரே குரல்’ பாடல்… லதாமங்கேஷ்கர் நாளை வெளியிடுகிறார்…

Must read

டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு பணியில் இருவுபகல் பாராது பணியாற்றி வரும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ‘ஒரே நாடு ஒரே குரல்’ என்ற பாடல் சுமார் 100 பாடர்களுடன் 14 மொழிகளில் பாடப்பட்டு உள்ளது. இந்த பாடலை நாளை பிரபல இந்திப்பாடகி லதா மங்கேஷ்கர் நாளை வெளியிடுகிறார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டு உள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,  களத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் உள்பட பல துறையினர்  உயிர்களை பணயம் வைத்து  போராடி வருகிறார்கள்.
இந்த கொரோனா தடுப்பு போராட்டத்தில் பல மருத்துவர்களும் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், மருத்துவ பணியாளர்களின்   தன்னலமற்ற தியாகத்தை போற்றி, கவுரவிக்கிற வகையில் இந்தியாவின் முன்னணி பாடகர், பாடகியர் 100 பேர் ஒன்று சேர்ந்து ஒரே நாடு, ஒரே குரல் என்ற தலைப்பில் ஒரு பாடலை பாடி உள்ளனர். இந்த பாடல்  14 மொழிகளில் பாடப்பட்டுள்ளது.
இந்த பாடலை இந்தி பாடகி ஆஷா போஸ்லே, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், அனுப் ஜலோட்டா, அல்கா யாக்னிக், , கைலாஷ் கெர், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சான, மகாலட்சுமி அய்யர், மனோ, பங்கஜ் உதாஸ், ஷான், சோனு நிகம், தலாத் அஜிஸ், உதித் நாராயணன், ஜஸ்பிர் ஜாசி உள்பட 100 கலைஞர்கள்  பாடியுள்ளனர்
இந்த பாடல், நிகம், பாடகர் சீனிவாஸ், தாண்டன் ஆகியோரும் சிந்தையில் உதித்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாடல், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட 14 மொழிகளில் வெளியாகிறது.
மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் இந்த பாடலை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த பாடல் ஒரே நேரத்தில் டி.வி. ரேடியோ, சமூக வலைத்தளம் என 100 டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. வெளியிடுகிறார்…

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article