சென்னை: தியேட்டர்களில் 100 சதவிகிதம் இருக்கை அனுமதி,  வார இறுதி நாட்களில் கோயில்கள் திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்க 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பண்டிகை காலங்களில் கோவில்களை திறக்க வேண்டும் இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பேருந்து மால் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் ஹாயாக சுற்றி வரும் நிலையில், தமிழகஅரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதுபோல, தியேட்டர்களிலும் 100% இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.   தமிழக அரசு முன்னதாக அறிவித்தது.அதன்படி,வார இறுதி நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வெள்ளி,சனி,ஞாயிறுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் வார கோயில்கள் திறப்பு ,வழிபாட்டு தரிசனத்திற்கு விதித்த தடையை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள்,அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.