திருவனந்தபுரம்

மூணாற்றில் நடந்த கிருத்துவ கூட்டத்துக்குச் சென்று வந்த 100க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.

கிறித்துவர்களின் தென்னிந்தியத் திருச்சபை சார்பில் கடந்த ஏப்ரல் 13 முதல் 17 வரை மூணாற்றில் பாதிரியார்கள் மற்றும் கிறித்துவ மதத்தை  சார்ந்தவர்கள் கலந்துக் கொண்ட ஒரு கூட்டம் நடந்துள்ளது.  அதில் பல்வேறு திருச்சபைகளில் இருந்து சுமார் 350 பே கலந்து கொண்டுள்ளனர்.   இந்த கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பாதிரியார்களுக்கு இதில் கலந்து கொள்ளாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.   எனவே இந்த பாதிரியார்கள் திருவனந்தபுரம் தேவாலயத்துக்கு வந்து அங்கிருந்து பேருந்தில் சென்றுள்ளனர்.   தற்போது இவர்களில் சுமார் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் கழுகோடு தேவாலய பாதிரியாரான பிஜுமோன் சென்ற வியாழன் அன்றும் மற்றும் ஷைன் ராஜ் நேற்றும் உயிர் இழதுள்ளன்ர்.   தற்போது பாதிக்கப்பட்ட பாதிரியார்களில் பலர் அவரவர் ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஒரு சிலர் மட்டும் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

இது குறித்து எந்த ஒரு மருத்துவமனையும் எவ்வித விவரமும் தெரிவிக்க மறுத்துள்ளன.  தென் இந்தியத்  திருச்சபை செயலர் ஜேகப் மாத்தியூ ஒரு சிலருக்குத் தீவிர பாதிப்பு இருந்ததாகவும் தற்போது அவர்கள் குணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   மேலும் இந்த கூட்டம் அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராக நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.