பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க தயாா் கர்நாடக மாநில காங்கிரஸ் மாநில அரசின்  துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்து வந்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றதும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றம் செல்ல அவசியமில்லை என்றும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து தண்ணீர் திறக்க தயார் என்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து உள்ளதுடன்,  காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க கா்நாடகம் தயாராக உள்ளது என்று ம் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள காவிரி நீரை உடனடியாக திறந்து விட தமிழ்நாடு அரசு, மத்தியஅரசு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக மாநில முதல்வரும், துணை முதல்வரும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என முரண்டு பிடித்து வந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில், காவிரியில் தண்ணீர் திறந்து விட  கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 77-ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களை சந்தித்த துணைமுதல்வர் டி.கே.சிவகுமார்,  காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க கா்நாடகம் தயாராக உள்ளது. கா்நாடகத்திடம் இருப்பு இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு அளித்திருக்கிறோம். அதேபோல, நமது மாநில விவசாயிகளுக்கும் பாசனத்துக்கு தண்ணீா் கொடுத்திருக்கிறோம். காவிரி நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக யாருக்கும் குழப்பம் வேண்டாம். மழை பெய்தால் கண்டிப்பாக தமிழகத்துக்கு தண்ணீா் அளிப்போம்.

காவிரி விவகாரம் தொடர்பா,  நீதிமன்றத்தில் அரசின் நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக தெரிவித்து உள்ளார்.மேலும், காவிரி ஆற்றில் உள்ள கேஆர்எஸ் அணை மற்றும் பிற அணைகளுக்கு மழை மற்றும் நீர்வரத்து குறித்த பதிவுகள் இருப்பதாகவும், பயிர் நடவு குறித்து விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளதாக கூறினர். மேலும் கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராய சுவாமியும் பயிர்களை நட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

இரு மாநிலங்களும் நெருக்கடியான சூழலை சந்தித்து வரும் நிலையில், தண்ணீர் இருப்பு, மாநிலத்தின் குடிநீர்த் தேவை, விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கத் தயார் என்றும் , அதேநேரம் தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தற்போதைய சூழலை அறிந்து 8 ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்க அரசு முன்வந்துள்ளதாக கூறினார்.

தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கவலைப்பட அவசியம் இல்லை என்றும் இரு மாநிலமும் ஒன்று சேர்ந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் சிவகுமார் கூறினார்.நிகழ்கால சூழலுக்கு ஏற்ப இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படுவ தமிழக அரசிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்த சிவகுமார், தமிழக விவசாயிகளை ஒருபோதும் துயரத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்றும் அதேபோல் கர்நாடக விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்த தமிழக அரசு விரும்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு காவிரி நதியில் இருந்து 400 டி.எம்.சி. தண்ணீா் கடலில் கலந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் குழப்பம் எதுவும் தேவையில்லை என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேகதாது  அணை திட்டத்துக்கும் தமிழகம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இதுபோல பற்றாக்குறைக் காலங்களில் தமிழகத்துக்கு உதவியாக மேகதாது அணை திட்டம் துணை நிற்கும். இந்திய சுதந்திர தினத்தன்று நமது ‘இந்தியா’ கூட்டணி மக்கள் ஆதரவு அளிக்க உறுதிபூண வேண்டும். நாட்டை காப்பாற்றும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதற்கு பெங்களூரு சாட்சியாக இருந்தது. எதிா்காலத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் என்றாா்.

 தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.