டில்லி

ற்போது யுபிஐ மூலம் நாட்டில் 10% பணப் பரிவர்த்தனை நடந்து வருவதாக ஒரு ஆய்வு முடிவில்  தெரிய வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஐ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் யுனைடெட் பேமன்ச் இண்டர்ஸ்பேஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஸ்மார்ட் போன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து நேரடி பணப் பரிவர்த்தனை செய்ய இம்முறை வழி செய்கிறது.   இது மிகவும் எளிய முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் வழி ஆகும்.

இந்த முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், வங்கிக் கணக்கு எண் என எதுவும் தேவை இல்லை.   ஸ்மார்ட் போனில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து யுபிஐ மூலம் நேரடியாகப் பணம் அனுப்ப முடியும்.   இது அனைத்து இணைய வங்கி மூலமும் செயல்படுகிறது.

இது குறித்து மேக்குரி என்னும் ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தி உள்ளது,  அந்த ஆய்வு முடிவில் தற்போது செய்யப்படும் சில்லறை பணப் பரிவர்த்தனையில் 10% யு பி ஐ மூலமே செய்யப்படுவதாகத் தெரிய வந்துள்ளது    இவ்வாறு செய்யப்படும் பணப் பரிவர்த்தனை நான்கு வருடங்களில் சுமார் 400% வளர்ந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் இரு வருடங்களுக்கு முன்பு 2% வளர்ச்சி மட்டுமே இருந்துள்ளது.

இந்த ஆய்வில் அனைத்து வகை ரொக்கம் இல்லா பரிவர்த்தனைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  அவற்றில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை விட யுபிஐ பயன்பாடு 2.8 மடங்கு அதிகம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.   கடந்த 2021 நிதியாண்டில் மட்டும் ரூ.41 கோடி வரை யுபிஐ மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.   இது ரொக்க பணத்தை விட 0.5% அதிகமாகும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.