சென்னை:

லேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மலேசியாவில் இன்று 179 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய வட்டாரத்திலேயே ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியுள்ளன. அங்கு மொத்தம் 3,662 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று நண்பகல் நிலவரப்படி அங்கு மேலும் நால்வர் கிருமித்தொற்றால் மரணமடைந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மலேசியா தற்போது அதன் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. அது இம்மாதம் 14 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது.

உத்தரவை மீறுவோரை கைது செய்வதற்கு முன்னதாக, வீடு திரும்ப அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமை அதிகாரி சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.