புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 1 முதல் 5 நாள்களுக்குள் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் 25 முதல் 56 வயதுக்குள்பட்டவர்களாகவே உள்ளனர்.

இதுகுறித்து தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டறியும் ஆணையத்தின் ஆலோசகர் என்.கே. அரோரா தெரிவிக்கையில், உயிரிழந்த அனைவருக்கும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவர்களது மரணத்துக்கு சரியான காரணம் கண்டறியப்பட்டுளள்தாக கூறியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.