சென்னை: வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10.5% உள் ஒதுக்கீடு இறுதியானதல்ல என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  கூறினார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு அவசரம் அவசரமாக தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள் இதற்கான மசோதாவை நிறைவேற்றி அறிவித்து உள்ளது. இதை பாமகவினர் கொண்டாடி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற ஜாதியினரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக தலைவர்களே, வன்னியர் இடஒதுக்கீடு இறுதியானது அல்ல என்று கூறி வரும் நிலையில், தற்போது துணைமுதல்வர் ஓபிஎஸ்-சும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு இறுதியானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்   இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடுதான், தற்போதைய நிலையில், அது  இறுதியானது அல்ல. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, வன்னியர்களுக்கு  நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.