டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் புதிதாக 54 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்16,047 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம்16,167 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,047ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,90,697ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.94% ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து19,539 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,35,35,610 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,28,261ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,826 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.19 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.29 % ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.52 % ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 207.03 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.