டெல்லி: பீமா கொரோகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 83வயது எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் வரவரராவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையையை நீக்கி  நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். அவரது உடல்நிலை மற்றும் வயது முதிர்வு காரணமாக ஜாமின் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

2018 ஜனவரியில் பீமா கொரோகான்  200வது நினைவுகூறும் நிகழ்வின் போது ஏற்பட்ட கலவரத்தினை ஒட்டி 81 வயதுடைய எழுத்தாளரும் – கவிஞருமான வரவரராவின் மீது கலவரத்தினை தூண்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ 2018 ஆகஸ்டில் கைது செய்து. இந்த வழக்கில்,, நீதிமன்றத்தின் மூலமாக வெளியே வந்த வரவரராவ் மீண்டும்,  நவம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆரம்பத்தில் பூனே சிறையிலும் பின்பு மும்பை சிறையிலும் அடைக்கப்பட்டார் .

இதற்கிடையில் வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டவரை எழுத்தாளர்  வரவரராவை விடுதலை செய்யக்கோரி,  பிரதமர் மோடிக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலேயே 40க்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர் கடிதம் எழுதினர்,  மேலும், வரவரராவின் மனைவி ஹேமலதா, மகள்கள் சஹாஜா மற்றும் அனலா பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போதும் கூட அவரின் உடல்நிலையினை கருத்தில்கொண்டு விடுவிக்ககோரினர். ஆனால் அதை மத்தியஅரசு கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டது.

பின்னர் அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனில் உள்ளார் .

இதையடுத்து, அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில், பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  ஜாமின் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில் உடல்நிலை பாதிப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் பல்வேறு பாதிப்புகளால் அவதிப்படுவதாகவும், முறையான சிகிச்சை பெற ஜாமின் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரவரராவை ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அவருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளயும் ரத்து செய்துள்ளது.