சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 3000க்கும் கீழ் குறைந்தது. இன்று புதியதாக 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 174 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,913 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது. அதுபோல, 3,321 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும், இன்று 49 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32,767ஆக குறைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையில், இன்று 174 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 53,48,19 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8256 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 245 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 21,85,36 ஆக ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது, 1659 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 338ஆக குறைந்துள்ளது, தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 215 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 174 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் இன்று 169 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் இன்று 116 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
அரியலூர் 32
செங்கல்பட்டு 148
சென்னை 174
கோயம்புத்தூர் 338
கடலூர் 90
தர்மபுரி 65
திண்டுக்கல் 23
ஈரோடு 215
கள்ளக்குறிச்சி 72
காஞ்சிபுரம் 42
கன்னியாகுமரி 45
கரூர் 23
கிருஷ்ணகிரி 53
மதுரை 39
மயிலாடுதுரை 24
நாகப்பட்டினம் 54
நாமக்கல் 88
நீலகிரி 99
திருவள்ளூர் 85
திருவண்ணாமலை 84
திருவாரூர் 30
தூத்துக்குடி 52
திருநெல்வேலி 20
திருப்பூர் 169
திருச்சி 116
வேலூர் 43
விழுப்புரம் 56
விருதுநகர் 35