டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 7584 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாட்டில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று 7420 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான நிலவரப்படி,  வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,05,106 ஆக உயர்ந்தது.

நேற்று  புதிதாக மேலும் 24 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,747 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 3791 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,44,092 ஆக உயர்ந்துள்ளது இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 267 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.08% ஆக குறைந்துள்ளது.

.இந்தியாவில் நேற்று மட்டும் 15,31,510 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.