டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு  1,32,02,783 ஆக உ யர்ந்துள்ளது.  இதுவரை 1,19,87,940 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,68,467 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில் 10,40,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்று உருமாறிய நிலையிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவி உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு மக்களிடையே அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

தொற்று பாதிப்பில் மக்கள் நெருக்கம் மிகுந்த மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 32,88,540 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலையி 5,34,603 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 26,95,148 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 57,329 பேர் உயிரிழந்துள்ளனர்.

2வது இடத்தில் கேரள மாநிலம் தொடர்கிறது. அங்கு இதுவரை 11,54,011 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,12,758 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,751 பேர் மரணத்தை தழுவியதுடன், தற்போதைய நிலையில், 36,185 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

3வது இடத்தில் தமிழகம் தொடர்ந்து வருகிறது. அங்கு இதுவரை 9,20,827 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 12,863 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 8,74,305 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 33,650 பேர் சிகிச்சையில் உள்ளனர்.