10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

Must read

 
சென்னை மாதவரத்தில் 10ம் வகுப்பு படிக்கும மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
mathur student suicide
மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2–வது பிரதான சாலை 33–வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணனின் மகள் ஆஷா. மணலியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து ஷா வீட்டுக்கு வந்தார். தனது 2–வது மகளை டியூசனில் இருந்து அழைத்து வர ஆஷாவின் தாயார் சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த ஆஷாவின் தாயார், தனது மகள்  பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என  விசாரித்து வருகின்றனர்.

More articles

Latest article