டெல்லி: 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் கொள்முதல் செய்யப்படும், மேலும் 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் பிளாட் அமைக்கவும் பிஎம்-கேர்ஸில் இருந்து நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா தடுப்பு மற்றும் ஆக்சிஜன், மருந்துகள் பற்றாக்குறை குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிஎம்கேர்ஸ் நிதி மூலம், 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், டிஆர்டிஓ உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேலும் 500 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிஎஸ்ஏ ஆலைகள், கொரோனா தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும், இவைகள், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களின் தேவையை மேம்பபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் முன்னர் அனுமதிக்கப்பட்ட 713 பி.எஸ்.ஏ ஆலைகளுக்கு கூடுதலாக, 500 புதிய பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பி.எஸ்.ஏ) ஆக்ஸிஜன் ஆலைகள் பி.எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.ஏ ஆலைகள் மாவட்ட தலைமையகம் மற்றும் 2 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவதை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். இந்த 500 பிஎஸ்ஏ ஆலைகள் டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆர் உருவாக்கிய உள்நாட்டு தொழில்நுட்பத்தை, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மாற்றுவதன் மூலம் நிறுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.