மேதி

மேதி நகரைச் சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் தேவை என உதவி கோரி டிவிட்டரில் பதிந்ததால் அவர் மீது வழக்கு  பதிவு செயபட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது.  இதையொட்டி பலரும் தங்கள் உறவினருக்கு ஆக்சிஜன் தேவை என உதவி கோரி சமூக வலைத் தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இவற்றில் ஒரு சில பதிவுகள் போலியாக உள்ளதாக கூறப்ப்டுகிறதுக்.

இதையொட்டி உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத் இவ்வாறு போலி பதிவு இடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யவும் அவர்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி அம்மாநில காவல்துறையினர் இத்தகைய புகார்களை மிகவும் கண்காணித்து வருகின்றனர்.

உபி மாநிலம் அமேதியை சேர்ந்த ஷஷாங் யாதவ் என்னும் இளைஞர் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் தேவை என நடிகர் சோனு சூட்டிடம் வேண்டுகோள் விடுத்து டிவிட்டரில் பதிவு இட்டார்.  இதை ஒரு பத்திரிகையாளர் அமேதி தொகுதி மக்களவை உறுப்பினர் ஸ்மிரிதி இரானிக்கு ஷேர் செய்தார்.   இதற்கு ஸ்மிரிதி தாம் ஷஷாங்கை பலமுறை தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியவில்லை எனத் தெரிவித்தார்.  இந்நிலையில் ஷஷாங் யாதவின் தாத்தா உயிர் இழந்து விட்டார்.

அமேதி காவல்துறையினர் அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியின் பரிந்துரைக்கு ஏற்ப இது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.  அவர்கள் ஷஷாங்கின் தாத்தா கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனவும் அவருக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை எனவும் அறிவித்தனர்.  மேலும் பொதுமக்களைப் பயமுறுத்தியதாக அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிந்துள்ளனர்.  ஆக்சிஜன் உதவி கேட்டதற்காக பாஜக் அரசு வழக்குப் பதியப்பட்டது நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.