சென்னை:
மிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் 350 படுக்கைகள் காவல் துறையினருக்கு பிரத்தியோகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.