டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.05 சதவிகிதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும்,  2,797 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றுபாதிப்பு 2,000-க்கும் கீழ் குறைந்த நிலையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,251 ஆகக் குறைந்துள்ளது

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,778 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,884 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,51,228 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.75% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 2,18,93,14,422 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,96833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.