கொச்சி: கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்த கடற்படை காவல்துறையினர், அதை கடத்தி வந்தவர்களையும் கைது செய்தனர்.

இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து ஹெராயின் உள்பட போதைப்பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தீவிரமான கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், மற்றொருபுறமாக கடத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 1,200 கோடி ஆப்கானிஸ்தான் ஹெராயின், பாகிஸ்தான் வழியாக ஈரானிய படகில் இந்தியா வரும் வழியில் கேரள கடற்படையில் பிடிபட்டது.

இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ஒருங்கிணைந்த நடவடிக்கையில், கேரளாவின் கொச்சி கடற்கரையில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் ஏற்றிச் சென்ற படகை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். இதை கடத்திய வந்த 6 ஈரானியர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கூறி கடற்படை துணை இயக்குநர் ஜெனரல் SK சிங் , படகு பறிமுதல் செய்யப்பட்டு, 6 ஈரானிய பணியாளர்கள் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள்  ஆப்கானில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் போதைப் பொருளை கடத்த இருந்து தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1200 கோடி இருக்கும் என்றும் கூறினார்.