சென்னை: தமிழகத்தில் இதுவரை 22,37,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், இதுவரை 5,16,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் சென்னை உள்பட சில மாவட்டங்களில் குறைந்துள்ள நிலையில், கோவை உள்பட 11 மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில், 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர் இதுவரை 2,80,28,680 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 434 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 27,005 பேர் உயிர் இழந்துள்ளனர். அதுபோல இதுவரை 19,65,939 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாநில தலைநகர் சென்னையில் 1,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,16,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 50 பேர் உயிர் இழந்தைத் தொடர்ந்து, இதுவரை 7,475 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் நேற்று 4,446 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,87,749 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 21,404 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை 2வது இடத்தில் இருந்து வருகிறது. வடசென்னை ராயபுரம் பகுதியை தவிர அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையின் சராசரி தொற்று விகிதம் தற்போது -5.5% ஆக உள்ளது. 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் சென்னையின் சராசரி தொற்று விகிதத்திற்கும் குறைவாகவே பாதிப்புகளை கொண்டுள்ளது.
ராயபுரத்தில் கொரோனா தொற்று வீதம் 0.7% ஆக உயர்ந்துள்ள நிலையில், அதன் அருகே இருக்கும் திரு.வி.க. நகரில் தொற்று அதிகரிப்பு விகிதம் 0% ஆக பதிவாகியுள்ளது.
கடந்த வார ஆரம்பத்தில் 38,680 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 24,290 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளாக கோடம்பாக்கம் (2320) முதலிடம் வகிக்கிறது. 2258 நபர்கள் அண்ணா நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 2154 நபர்களுக்கும், அடையார் மற்றும் தேனாம்பேட்டையில் முறையே 2093 மற்றும் 2076 நபர்களும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறைந்த அளவாக மணலியில் 452 நபர்களுக்கும், திருவொற்றியூர் பகுதியில் 753 நபர்களுக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000க்கும் குறைவாக உள்ளது.