சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஆயிரத்து 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 181 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 69 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26 லட்சத்து 17 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 16 ஆயிரத்து 864 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,50,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4 பேர் உயிர் இழந்துள்ளதால், இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,495 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 189 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 5,40,170 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,901 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்: