ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 17.33 கோடியையும், உயிரிழப்பு 37.27 லட்சத்தையும் தாண்டி உள்ளது. தொற்று பாதிப்பில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வதுஇடத்தில் தொடர்ந்து வருகிறது.
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது உருமாறிய நிலையில் 2வது அலையாக பரவி மக்களை கொன்றுகுவித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,33,18,470 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 37,27,,283 பேர் இதுவரை உயிரிழந்தனர்.
தற்போதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15,60,52,704 பேர்.
தற்போதைய நிலையில், 13,531,777 ((99.3%) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 88,211 ((0.7%) பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும், 4வது இடத்தில் பிரான்சும், 5வது இடத்தில் துருக்கியும் இருந்து வருகிறது.