இந் நிலையில், இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து இன்று 05/06/2020:) காலை 10 மணி அளவில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
இந்தியாவில் இதுவரை 2லட்சத்து 26ஆயிரத்து 770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடநத 24 மணி நேரத்தில் 273 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பலி எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 109462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 110960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 77 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 77793 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27256 பேருக்கும், டெல்லியில் 25004 பேருக்கும்,
குஜராத்தில் 18584 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 43,86,376 மாதிரிகள் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 1,43,661 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில) தகவல் தெரிவித்து உள்ளது.