டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6000க்கு கீழ் குறைந்துள்ளது மக்களிடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 289 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு பல மாதங்களுக்கு பின்னர் 6000க்கு கீழ் குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்திலான  கொரோனா நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 0.63 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று புதிதாக மேலும்,  5 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 289 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 14 ஆயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 651 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரத்து 721 ஆக உள்ளது. குணமடைவோர் 98.65% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  63 ஆயிரத்து 878 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் 0.15 சதவிகிமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  1,78,55,66,940 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.