சென்னை: தமிழகத்தில் இதுவரை  21,23,029 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 26,513 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில்  2,467 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில்  490 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,722 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும்,  31,673 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 18,02,176 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,67,397 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை  2,96,131 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில், இதுவரை  5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  58 பேர் உயிர் இழந்த நிலையில்,  இதுவரை 7,145 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று 4,234 பேர் குணம் அடைந்துதுடன், இதுவரை  மொத்தம் 4,67,723 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் மட்டும் 33,069 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி  கொரோனா பாதிப்பில் சென்னை 2வது இடத்தில் உள்ளது.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு:

[youtube-feed feed=1]