01/07/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,070 பேருக்கு பாதிப்பு, 14413 டிஸ்சார்ஜ்…

Must read

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,070 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 14413 டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு உள்ளனர்.

மத்தியசுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் தொடர்பான தகவல்களை  வெளியிட்டள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில், மேலும் 17,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 69 ஆயிரத்து 234 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 28-ந்தேதி பாதிப்பு 11,793 ஆக இருந்த நிலையில், 29ந்தேதி 14,506 ஆகவும், நேற்று 18,819 ஆகவும் உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,083 பேர், மகாராஷ்டிரா வில் 3,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 2ஆயிரத்தை கடந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 1,524, கர்நாடகாவில் 1,046, டெல்லியில் 865, குஜராத்தில் 547 அரியானாவில் 534, தெலுங்கானாவில் 468, உத்தரபிரதேசத்தில் 437 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு காரணமாக, மேலும் 23 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,139 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 14,413 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 906 ஆக உயர்ந்தது.

தற்போது  நாடு முழுவதும் 1,07,189 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,634 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 74 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 11,67,503 டோஸ்கள் அடங்கும்.

நாடு முழுவதும் நேற்று 5,02,1510 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை  86.28 கோடி பரிசோதனை நடைபெற்றுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

More articles

Latest article