டெல்லி: இந்தியாவில்   கடந்த 24மணி நேரத்தில் 2,745 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திடீரென பாதிப்பு உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.60% ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்றுகாலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,745  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம்  2,706  பேருக்கும், நேற்று 2,338   பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 6  பேர் பலியாகியுள்ள நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  5,24,636ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மேலும்,  2,236பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,17,810   ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது

தற்போது வரை இந்தியாவில் 18,386பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,91,110 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 193.57 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது .