தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 44, செங்கல்பட்டில் 46 திருவள்ளூரில் 2 மற்றும் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 2 பேருக்கும் வேலூரில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும் கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இன்று மொத்தம் 12,340 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 56 ஆண்கள் 42 பெண்கள் என மொத்தம் 98 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

49 பேர் இன்று குணமடைந்த நிலையில் 542 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.