கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.

அதேவேளையில், 30 செப்டம்பர் 2023 வரை, ‘நோட்டு செல்லும் ஆனா புழக்கத்தில் தான் இருக்காது’ என்று விளக்கமும் அளித்துள்ளது.

2016 ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது பொதுமக்களுக்கு நான்கு மணி நேரம் கூட அவகாசம் வழங்கப்படாத நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி 135 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் இது யாருக்கான அரசு என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் :

500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!

என்று பதிவிட்டுள்ளார்.

₹2000 தடை நவீன துக்ளக்கின் முட்டாள்தனம் : துஷார் காந்தி காட்டம்