சென்னை:
முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வர் நிதியிலிருந்து மேற்கொள்ளக்கூடிய செலவீனங்கள் குறித்த விவரங்கள் பொது வெளியில் வெளிப்படையாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel