சென்னை:

த்தியஅரசு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில்,  இரட்டை குடியுரிமை வழங்க சான்சே இல்லை என்று முன்னாள் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம் ரஜினிகாந்த்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு அளிப்பதாகவும், சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்றவர், தமிழகம் உள்பட இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வரும் ரஜினியின் பேச்சு தமிழக பாஜக தலைவர் எஸ்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், உடனே பதிலடி கொடுத்துள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 9-ன் கீழ் இரட்டைக்குடியுரிமை வழங்க முடியாது  என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பும் இல்லை என்று கைவிரித்து உள்ளது.

அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை  என்று  மத்திய அரசு மத்திய இணை அமைச்சர் பதில் தெரிவித்து உள்ளார்.

ஆன்மிக அரசியல் செய்யப் போவதாககூறி வரும் ரஜினி, பாஜக ஆதரவான நிலைப்பாட்டையே அனைத்து விஷயங்களிலும் எடுத்து வருகிறார். இந்த நிலையில், ரஜினியின் இன்றைய பேட்டிக்கு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அமித்ஷாவின் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பதில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.