Nayantara_Sahgal-mg7rlv9g7mw88js4yu3ea96idi1xhzhm0qvch4yp1s

த்தரபிரதேச மாநிலத்தில் பசு இறைச்சியை உண்டதாக கூறி இக்லாக்  என்பவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த விசயம் நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் வெளிப்பாடு இலக்கிய உலகிலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

இந்த கொலையைக் கண்டித்தார் இலக்கியவாதி நயன்தாரா ஷேகல், அதோடு, தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதை மத்திய அரசிடம் திருப்பி கொடுத்தார்..

‘ரிச் லைக் அஸ்’ என்ற ஆங்கில நாவலுக்காக 1986ம் ஆண்டு நயன்தாரா ஷேகலுக்கு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது. “தேசத்தில் நடைபெற்று வரும் மத மோதல்கள் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நயன்தாரா ஷேகல், “வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு சிதைந்து வருவதால் விருதை திருப்பி அளிக்கிறேன்” என்று கூறினார். இவர் மறைந்த பிரதமர் நேருவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, மத்திய அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, இந்தி கவிஞர் அசோக் வாஜ்பேயி சாகித்ய அகாடமி விருதை அரசிடம் திரும்பி அளித்தார்.

 

ashok_2574989d

இது குறித்து அசோக் வாஜ்பேயி கூறும்போது, “எழுத்தாளர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதை வெளிப்படுத்த இதுவே சிறந்த தருணம். எழுத்தாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது, சமீபமாக இவர்கள் கொலை செய்யவும் படுகின்றனர்.

பல லட்சக்கம் மக்களை கவர்ந்திழுக்கும் பேச்சுத்திறமை உள்ள பிரதமர் நமக்கு வாய்த்துள்ளார். ஆனால் இங்கோ, எழுத்தாளர்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். மோடியின் அமைச்சரவை சகாக்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவர் இன்னமும் மோடி மவுனம் சாதித்து வருகிறார். ஏன் அவர்கள் வாயை அவர் அடைக்கவில்லை? “ என்று கவிஞர் வாஜ்பாய் கேள்வி எழுப்பியிருக்கிறார்.