vinayagar new

சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சிலைகள் தெருக்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றன.    சென்னையில் 2,093 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட 14 அமைப்புகள் சார்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தெருக்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றன.

இந்து முன்னணி சார்பில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.  நேற்று இரவோடு இரவாக சென்னையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன

வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட இந்த சிலைகள் வரம் 20-ம் தேதி முதல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.  அன்று  இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் விமரிசையாக நடக்க இருக்கிறது. 21- மற்றும் 23-ம் தேதிகளில் மற்ற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலம் நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.  சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னையில் வைக்கப்படும் ஒவ்வொரு சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.