மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லுசிஃபர்.

தற்போது லுசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திரா சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இயக்குநர் மோகன் ராஜா இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NVR Cinema மற்றும் Konidela நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மேலும் இத்திரைப்படம் முழு ரிமேக்காக இருக்காது எனவும், ஒரு தழுவலாக மட்டுமே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.