டில்லி

டகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 9 மற்றும் 10

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தனிப்பட்ட பேட்டியில் மட்டும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதை ஒட்டி ஊடகக்கள் அவருக்கு 15 கேள்விகள் எழுப்பி இருந்தன.

அந்த வரிசையில் இன்று 9 மற்றும் 10 ஆம் கேள்விகள் இதோ :

9. கடந்த 1992 ஆம் வருடம் வரை அயோத்தியில் இருந்த பாபர் மசூதி நிலத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக நீங்களும் உங்கள் கட்சியும் வாக்களித்திருந்தது. பாபர் மசூதியை இடித்தது மிகவும் பெரிய குற்றம் என்பதையும் அவ்வாறு செய்தவர்களை தட்ண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்பதே சரி என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா ? அப்படியானால் நீங்கள் சட்டம் ஒன்றை இயற்றி ராமர் கோவில் கட்டுவோம் என எப்படி உறுதி அளித்தீர்கள் ? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என தெரியாமலே நீங்கள் எப்படி அந்த வாக்குறுதியை அளித்தீர்கள்? ஒருவேளை உச்சநீதிமன்றம் அந்த நிலம் இஸ்லாமியருக்கு சொந்தம் என தீர்ப்பளித்தால் உங்கள் வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்?

10. காஷ்மீரில் தற்போது மக்கள் முன்பு இருந்ததை விட மிகவும் பாதுகாப்புக் குறைவாக உணர்வதாக பல வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் காஷ்மீர் மாநிலத்தில் 4 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறீர்கள். முதலில் கூட்டணி அரசு மூலமும் இப்போது நேரடியாகவும் ஆட்சி புரிந்து வருகிறீர்கள். பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் இணைவதும் அதிகரித்துள்ளது. ஆனால் நீங்கள் இது குறித்து எவ்வித தீவிர முயற்சியும் செய்யாமல் இருக்கிறீர்கள். அதற்கு பதிலாக விதி எண் 35ஏ மூலம் மேலும் பரபரப்பை உண்டாக்கி வருகிறீர்கள். இனி இந்த விவகாரத்தை எவ்வாறு கையாண்டு ஒரு தீர்வு காண எண்ணி இருக்கிறீரகள்?

அடுத்த கேள்விகளை நாளை காண்போம்.