சிட்னி

ந்திய கிரிக்கெட் அணி 1948 ஆ,ண்டுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.   இந்த பயணத்தில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல்  மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றது.   இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா வென்றது.

கடந்த வியாழக்கிழமை சிட்னி நகரில் 4 ஆம்வது டெஸ்ட் போட்டி  தொடங்கியது.   இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கட்டுகளை இழந்து 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.   அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா 322 ரன்கள் பின் தங்கி இருந்ததால் ஃபாலோ ஆனுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.   நேற்று மழை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது.   இறுதிநாள் ஆட்டமான இன்றும் மழை தொடர்ந்து வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா சமன் செய்யும் என்னும் நிலையில் ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக் உள்ளது.  எனவே இந்த போட்டி நேரமின்மை காரணமாக டிராவில் முடிந்து இந்தியா தொடரை  கைப்பற்ற உள்ளது.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் கடந்த 1948 முதல் விளையாடிய போதும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் அந்நாட்டை இதுவரை இந்திய ஒரு டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெறாமல் இருந்து வருகிறது.   இன்று முடியும் இந்த டெஸ்ட் பந்தயத்தினால் இந்திய தொடரை வெல்ல உள்ளது.

சுமார் 41 ஆண்டுகளுக்கு பின் இந்தியா அடைய உள்ள இந்த வெற்றியின் போது இந்திய அணிக்கு விராட் கோலி தலைவராக இருப்பது அவருக்கு பெருமை அளிக்கும் என கூறப்படுகிறது.   இந்தியாவின் இந்த சாதனையை கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.