mamatam1
 
மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் என்றும் அக்கட்சிக்கு 178 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத்தேர்தல் வரும்… தேதி நடைபெறுகிறது. மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் ஏபிபி எனும் இந்தி செய்தித் தொலைக்காட்சியும் நீல்சன் பகுப்பாய்வு நிறுவனமும் இணைந்து தேர்தல் முடிவு தொடர்பான கருத்துக் கணிப்பை அங்கு நடத்தியது. அது தொடர்பாக அத்தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மார்ச் -8 முதல் மார்ச்-20 ஆம் தேதிவரை மாநிலத்தின் 118 தொகுதிகளில் 14,450 பேரிடம் கருத்துக் கணிப்பு நட்த்தப்பட்டது. அதில் 178 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டம்னறத் தேர்தலில் கிடைத்த இடங்களைவிட அதிகமாகவே இருக்கும்.  கடந்த தேர்தலில் மம்தா கட்சிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்த தேர்தலில் 45 சதவீதம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்த இடத்தில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்கு 110 இடங்கள் கிடைக்கும்.  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அடுத்த இடத்தில் இருக்கும் காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பல தொகுதிகளில் நூலிழை அளவிலான வித்தியாசமே காணப்படுகிறது.
பாஜகவுக்கு வெறும் 5 சதவீத வாக்குகளும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 58 சதவிதம் பேர் மம்தாவின் ஆட்சியை மிகநன்று  மற்றும் நன்று என சான்றளித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே  ஆளும் கட்சியை மோசம் மற்றும் மிகமோசம் என தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க சிபிஐ ( எம்)  கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சாரியா, பிரதமர் மோடியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி மாநிலத்தில் மிகவும் பிரபலமான தலைவராக காணப்படுகிறார் என்பதும் இக்கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவின்  தேசிய ஜனநாயக கூட்டணியை 43 சதவீதம் பேர் மிகநன்று  மற்றும் நன்று எனவும் 23 சதவீதம் பேர் மோசம் மற்றும் மிகமோசம் எனவும் இக்கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.