💥தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சிப் பிரமுகர்கள் என்னிடமே ரூ.10 கோடி வரை பேரம் பேசினார்கள் என்று தேமுதிகவின் முன்னாள் எம்.எல். ஏ. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
partha
💥 காரை மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஜாமின் கோரிய ஐஸ்வர்யாவின் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஐஸ்வர்யாவின் ஜாமின் மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
💥 திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்ததால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டன. மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தற்போது குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது தீ வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை குப்பையில் பற்றிய தீ காற்றின் வேகத்தால் வேகமாக பரவியதால் புகைமூட்டம் ஏற்பட்டது.  திண்டுக்கல் – சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புகைமூட்டம் சூழ்ந்தது. புகையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 8 மணி நேர பொராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
jaya-2
💥நீதிமன்றத் கட்டிடங்கள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு. சென்னை: திருவள்ளூரில் 7 நீதிமன்றத் கட்டிடம், 8 நீதிபதிகள் வீடுகள் ரூ. 23.5 கோடியில் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் திருப்பூரில் 13 நீதிமன்றங்களுக்கான கட்டிடம் ரூ. 33.75 கோடியில் கட்டப்படும் என கூறியுள்ளார்.
💥ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் சந்தையை வியப்பில் ஆழ்த்தும் கருவிகளை வழங்குவதோடு சுதந்திர தினத்தைக் கொண்டாட லீஇகோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேக சலுகைகளையும் வழங்கியுள்ளது. லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேக சலுகைகள் ஆகஸ்டு 10 முதல் 12 ஆம் தேதி வரை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி நோ காஸ்ட் இஎம்ஐ ‘No Cost EMI’ ரூ.500 EGV மற்றும் 10 சதவீதம் கூடுதல் கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கிய சலுகைகளின் மூலம் லீ 2, லீ மேக்ஸ் 2 மற்றும் லீ 1எஸ் இகோ போன்ற சூப்பர்போன் கருவிகளைச் சிறப்பு விலையில் வாங்க முடியும்
அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையின் மூலம் 0% வட்டி, 0% முன்பணம், 0% சேவைக் கட்டணம் போன்றவை அடங்கும்.
panchu
💥பஞ்சு அருணாசலம் உடல் இன்று தகனம் – பிரபலங்கள் அஞ்சலி.
💥 சீர்காழி அருகே விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டதாக போலி பட்டியல் தயாரித்து மோசடி செய்யப்பட்டது. தாண்டவன்குளம் வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ. 7 லட்சம் மோசடி நடந்துள்ளதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். வெள்ள நிவாரண பட்டியலில் பெயர் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
💥ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி கருங்கல் பொதுக்கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இளங்கோவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு 4 வாரம் வழக்கை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை. இந்த வழக்கில் இளங்கோவன் நேரில் ஆஜராகவும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது

💥எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டு பணிமனை தண்டவாள பாதை தண்டவாளத்தில் சிபிசிஐடி ஆய்வு. எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டு பணிமனை பாதை தண்டவாளத்தில் சிபிசிஐடி ஆய்வு நடத்தினர். ரயில்வே பாதுகாப்படையுடன் சேர்ந்து சிபிசிஐடியும் சோதனை நடத்தி வருகிறது. சேலம்-சென்னை வந்த ரயிலில் பணப்பெட்டி இருந்த ரயில் பெட்டி மட்டும் பணிமனைக்கு சென்றுள்ளது.
💥 ஐ.ஓ.பி வங்கி சர்வர்கள் முடங்கியதால் பணப்பரிவர்த்தனை கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஐ.ஓ.பி சர்வர்கள் ஒரே நேரத்தில் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் தவிப்புக்குள்ளாகினர்.
💥ஒலிம்பிக்கில் இன்று: இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகள்! ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் விவரங்கள்:
வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஹாக்கி
💥 விழுப்புரம் அருகே சாலாமேட்டில் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பேருந்து சிறைபிடித்துள்ளனர். தளவானூர்-விழுப்புரம் இடையே ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் கூட்டநெரிசல் எனப் புகார் அளித்துள்ளனர்.
💥 கும்பகோணம் அருகே ஏரகரம் கிராமத்தில் கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏரகரம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் மாடு மேய்க்க வயலுக்கு சென்றுள்ளார். அப்போது கரும்புகொள்ளையில் கரடியை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் கிராம மக்களிடம் தெரிவித்தார். கரும்பு காட்டில் கரடியை தேடி கிடைக்காததால் வனத்துறையினரிடம் கிராம மக்கள் புகார் கொடுத்தனர். அதிகாரிகள் காட்டில் ஆய்வு செய்ததில் அப்பகுதியில் கரடி இருப்பதை உறுதி செய்தனர்.  இந்நிலையில் ஏரகரம் வடக்குத்தெருவில் கிராம மக்கள் கரடி நடமாடியதை பார்த்து விரட்டிச் சென்றுள்ளனர். இருப்பினும் கரடி தப்பியோடிவிட்டது. எந்நேரமும் கரடியை எதிர்பாரத்து மக்கள் ஆயுதங்களுடன் சுற்றி வருகின்றனர்.
💥 ஆம்பூர் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேவிகாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தனர். ஒன்றாம் வருப்பு படித்து வந்த பிரியா மற்றும் அன்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
💥 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால், கர்ப்பிணிகள் சிகிச்சைக்குச் செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். அத்துடன் செவிலியர்கள் வேறுபணிகளுக்கு அனுப்பப்படுவதால் மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக புகார் கிளம்பியுள்ளது
💥அதிகாரிகள் அலட்சியத்தால் வைகை கால்வாயில் கழிவுநீர் கலப்பு. விவசாயம் செய்வதற்கு பாசனம் தரும் கால்வாயில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போது சாக்கடை நீர் கலந்து விவசாய நிலங்களுக்குள் சென்று விடுகிறது. இதனால் விவசாய நிலங்களின் தன்மை மாறி விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். பாசன கால்வாய் உரப்புளி, கள்ளிக்கோட்டை, நென்மேனி உள்ளிட்ட ஊர்களின் அருகே செல்வதால் சாக்கடை நாற்றம் தாங்க முடியவில்லை. இரவில் கொசுக்கடியால் குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறோம். வைகை ஆற்றில் தண்ணீருக்கு பதில் சாக்கடை வருவது மிகவும் வேதனைபட வேண்டியதாக உள்ளது. ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து பாசன கால்வாய்க்குள் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகம் நகர் மக்களின் பொதுசுகாதாரத்தை காக்கும் விதமாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
💥 ஒலிம்பிக் போட்டியில் குவைத்தை சேர்ந்த, ஃபெகாய் அல் திஹானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் குவைத் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. ஆனால் பதக்கம் அதற்கு சொந்தமில்லை. ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்க குவைத் நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் அரசின் தலையீடு இருந்த காரணத்தினால் குவைத் ஒலிம்பிக் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஓ.சி தடை விதித்தது. தடையை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் உள்ள, சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் குவைத் முறையிட்டது. ஆனால் தடையை நீக்க சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அதே வேளையில், ஒலிம்பிக் கொடியின் கீழ் குவைத்தை சேர்ந்த வீரர்கள் ‘இன்டிபெண்டன்டாக’ பங்கேற்க தடையில்லை என அறிவித்தது.
💥படகு பழுதாகி 3 நாள்கள் நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மீட்பு. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பலர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் இவர்கள், நேற்று மீன்களுடன் ஒருவர்பின் ஒருவராக கரைக்கு திரும்பினர். ஆனால் அதில் மெகராஜூக்கு சொந்தமான படகில் சென்ற 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை. இதுதொடர்பாக மீன்துறை அலுவலகம், கடலோர காவல் படை, கப்பற்படையினருக்கு மெகராஜ் தகவல் தெரிவத்துவிட்டு மாயமான மீனவர்களை தேடி மற்றொரு படகில் சென்றார். மற்றொரு புறம் கடலோர காவல் படை மற்றும் கப்பற்படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஆள் கடலில் மாலை 6 மணி அளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் சற்று தூரத்தில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்கிற சத்தம் கேட்டிருக்கிறது. இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகை சத்தம் கேட்ட பகுதிக்கு செலுத்தினர். அருகில் சென்று பார்த்த போது மாயமான மண்டபம் மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. விசை படகு பழுதானதால் கடந்த 3 நாள்களாக கடலில் தத்தளித்து கொண்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மீனவர்களை 4 பேரையும் பத்திரமாக மீட்டு அவர்கள் வந்த விசைப்படகை ஜெகதாபட்டினம் மீனவர்கள் தங்கள் விசைப்படகில் கட்டி இழுத்து வந்தனர். இந்த படகு இன்று அதிகாலை 6 மணிக்கு ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தது. இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
💥 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மகனை அடித்துக் கொலை செய்த தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
💥முன்னதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா ( டி.ஆர்.பாலுவின் மகன் ) இன்று சட்டசபையில் முதல்முறையாக பேசப் போகிறார். அதற்காக எதிர்க்கட்சித்தலைவரும் திமுக பொருளாளருமான முக.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்
💥கோவை கணபதி மாநகரில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வீட்டில் 38 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்
💥திருவண்ணாமலை அருகே சிறுநாத்தூரில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 27 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. ராணுவ வீரர் முனுசாமி, குடும்பத்தினரை கத்தியால் தாக்கிவிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
💥டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிவு: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.66.90 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்து ரூ.66.72 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
💥சிட்டி யூனியன் வங்கியின் லாபம் ரூ.236 கோடியாக அதிகரிப்பு – நிர்வாக இயக்குநர் தகவல்
💥ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் தொடர ரகுராம் ராஜன் விருப்பம். அடுத்த மாதம் பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவியில் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் இதுவைர தன்னுடைய பணிகளை 90 முதல் 95 சதவீதம் வரை செம்மையாக செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள பணிகளை செய்வதற்கு சில காலம் பதவியை நீட்டித்தால் அதையும் முடித்து விடுவேன் என அவரது விருப்பத்தை பதிவு செய்துள்ளார்.
💥 நாட்டின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் இரண்டாவது நாளாக அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 70-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா அன்றைய தினம் கொடி ஏற்றுகிறார்.
இதனையொட்டி இரண்டாவது நாளாக இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறப்பு காவல்படை சார்பில் 162 பேரும், 9 காவல்துறை உயரதிகாரிகளும், 12 குதிரைப் படை வீரர்களும் பங்கேற்றனர். கடந்த 9-ம் தேதி முதல் நாள் ஒத்திகை நடைபெற்ற நிலையில், நாளை மறு நாள் மூன்றாவது மற்றும் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
💥பலாவை ருசிக்க வந்து பலியாகும் குதிரைகள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது சிறுமலை கிராமம். நிலப்பரப்பில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதியில் பலா, காபி, வாழை, காப்பி உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் விளைகின்றன. தற்போது பலா சீசன் என்பதால் விளைச்சல் அதிகளவில் உள்ளது. இங்குள்ள பலா தோட்டங்கள் சரிவான பகுதிகளில் பாதை வசதி இல்லாமல் உள்ளன. அறுவடை செய்யப்படும் பலாப்பழங்களை குதிரைகள் மூலமே கீழே கொண்டு வருவது வழக்கம். இதற்காக சிறுமலை, புதூர், தவிட்டுக்கடை, அகஸ்தியர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்க்கப்படுகின்றன. பலாவின் வாசனை காட்டெருமைகளை ஈர்ப்பதால் சில வாரங்களாக தோட்டங்கள், குடியிருப்புகளில் இதன் வருகை அதிகரித்துள்ளது.
தோட்டத்தில் காட்டெருமைகளுடன் நடக்கும் மோதலில் கொம்புகள் குத்தி குதிரைகள் பரிதாபமாக இறக்கின்றன. கடந்த 8ம் தேதி ஒரு குதிரை பலியாகியுள்ளது. குதிரை உரிமையாளர் நாச்சான் கூறுகையில், ‘பலா சீசன் துவங்கினாலே குதிரை பலி தொடர்கதையாகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இப்பகுதியில் 6 குதிரைகள் பலியாகி உள்ளன.
இறந்த குதிரைக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் தருகின்றனர். இதனை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காட்டெருமைகளை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார்.
💥ஜம்மு-காஷ்மீரில் 34 நாளாக ஊரடங்கு உத்தரவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
💥பல்லாவரம் கன்டோன்மென்ட் மைதானத்தில் தடுப்புச்சுவர் அமைக்க எதிர்ப்பு. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கன்டோன்மென்ட் மைதானத்தில் போக்குவரத்துக்காக 20 அடி இடம் வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டோன்மென்ட்க்கு சொந்தமான மைதானத்தை ஒட்டி 60-க்கும் மேற்பட்ட குடிசை மக்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். மைதானத்தையே பாதையாக அவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அங்கு 10 அடி இடைவெளி விட்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் தங்களுக்கு 20 அடி இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தடுப்புச்சுவர் அமைப்பதற்காக கன்டோன்மென்ட் மைதானத்தில் பள்ளம் தோண்டப்பட்ட போது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
0monthold-boy-died-after-UP-hospital-allegedly-demanded_SECVPF
💥உத்திர பிரதேசத்தில் சிகிச்சை அளிக்க ரூ.30 லஞ்சம் கொடுக்காததால் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு. உத்திர பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் உள்ள 10 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் ரூ.30 லஞ்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த குழந்தை சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
💥ரயில் பெட்டியின் மேற்கூரையை முன்னதாகவே துளையிட்டிருக்கலாம் ! : R.P.F இயக்குனர் பேட்டி: சேலம்: இந்தியாவில் ரயில் பெட்டியை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என, இந்தியன் ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் எஸ்.கே.பகத் கூறியுள்ளார். ரயிலில் வங்கிப் பணம் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குனர் எஸ்.கே.பகத், ரயில்வே பாதுகாப்புப் படை ஜஜி பாரி ஆகியோர் சேலத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி பகத், தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கொள்ளையரை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கைப்பற்றப்படும் என்றார்

மேலும் பேசிய அவர் ரயில் பெட்டியை துளையிட்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லாததால் கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு முன்கூட்டியே துளையிட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.
💥7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகளம் கணபதி, ஆரோக்கிய ராஜீவ் என மொத்தம் 7 பேர்… இவர்கள் அல்லாமல் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கத்தார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றார். இதில் ஒரே நாளில் 2 தமிழர்கள் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தைத் தந்தது. ஆண்கள் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4 ஆம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.
இதேபோல் குத்துச்சண்டையில் மங்கோலிய வீரரிடம் கத்தார் அணிக்காக களமிறங்கிய ஈழத் தமிழர் துளசி தருமலிங்கமும் தோல்வியைத் தழுவினார்.
எஞ்சிய தமிழராவது ஏதேனும் பதக்கங்களை கைப்பற்றி ‘மகிழ்ச்சி’ தருவார்களா?
💥குஜராத் மாநில பாஜக தலைவராக ஜிட்டு வகானி நியமனம். குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்து வந்த ஆனந்தி பென் பட்டேல் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதனைதொடர்ந்து பாஜக மாநில தலைவராக இருந்து வந்த விஜய் ரூபானி மாநில முதல்வராக தேர்தெடுக்கப்பட்டார்.
💥 பாசனத்துக்காக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
💥 செம்மரம் வெட்டச் சென்றதாக மேலும் 9 தமிழர்களை ஆந்திர போலீஸ் கைது செய்துள்ளது. திருப்பதி அருகே திம்மநாயுடுபாளையத்தில் ஆட்டோவில் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
💥ராம்குமாரை வீடியோ எடுக்க போலீசாருக்கு அனுமதி. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை, கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று வீடியோ எடுத்து ராம்குமாரின் வீடியோ பதிவை ஒப்பிட்டுப்பார்க்க போலீசார் அனுமதி கேட்டிருந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச்செல்லாமல் புழல் சிறை வளாகத்திலேயே வைத்து மாதிரி வீடியோ படம் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
💥கரும்பு விவசாயிகளுக்கான நிலுவையை அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ”இனிக்கும் கரும்பை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை தமிழகத்தில் கசப்பாக மாறி விட்டது. உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வழங்க மறுக்கின்றன. அதை வசூலித்துத் தர வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு என்ற போதிலும், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
💥தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு. தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112ம், பார்வெள்ளி விலை ரூ.430 ம் குறைந்துள்ளன. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ. 14 குறைந்து ரூ.2976 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.150 குறைந்து ரூ.31,830 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,808 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.51.70 க்கும், பார்வெள்ளி விலை ரூ.430 குறைந்து ரூ.48,330 க்கும் விற்பனையாகிறது.
💥வியட்நாம் செல்கிறார் பிரதமர் மோடி. புதுடில்லி: பிரதமர் மோடி வரும் செப்டம்பர் மாதம் வியட்நாம் செல்ல உள்ளார். 15 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். பிரதமர் மோடியின் வருகை, இருநாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் எனவும், தென் சீனக்கடல் தொடர்பான பிரச்னையில் இந்தியாவின் நிலையை வரவேற்பதாகவும் வியட்நாம் கூறியுள்ளது.வியாட்நாம் பயணத்திற்கு பின் பிரதமர் மோடி சீனாவிற்கும், லாவோஸ் நகருக்கும் செல்ல உள்ளார். சீனாவின் குவாங்சு நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார்
💥எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டு பணிமனை தண்டவாள பாதை தண்டவாளத்தில் சிபிசிஐடி ஆய்வு. எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டு பணிமனை பாதை தண்டவாளத்தில் சிபிசிஐடி ஆய்வு நடத்தினர். ரயில்வே பாதுகாப்படையுடன் சேர்ந்து சிபிசிஐடியும் சோதனை நடத்தி வருகிறது. சேலம்-சென்னை வந்த ரயிலில் பணப்பெட்டி இருந்த ரயில் பெட்டி மட்டும் பணிமனைக்கு சென்றுள்ளது.
💥நெய்வேலி அருகே உள்ள விஜயலட்சுமி நகைக்கடையில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை!! மந்தாரக்குப்பத்தில் உள்ள விஜயலட்சுமி நகைக்கடையில் 1.5 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடையின் பின்பக்கம் சுவரை துளையிட்டு நுழைந்த மர்ம நபர்கள் 25 கிலோ வெள்ளியையும் எடுத்து சென்றுள்ளனர்.
💥பாகிஸ்தான் குவெட்டா நகர் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு: பலர் படுகாயம்!! அல் கைர் மருத்துவமனையில் குண்டு வெடித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
💥பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!! 2016-08-11 தஞ்சை: தஞ்சை அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. சாலியமங்கலம் கிராமத்தில் சிலநாட்களுக்கு முன்பு கலைச்செல்வி என்ற இளம்பெண், இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குமார், ராஜா ஆகிய இருவர் மீதும் பிணையில் வெளிவரமுடியாத வகையில்வழக்கு பதிவு செய்யக் கோரி சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் இவ்வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு உரியதண்டனை வாங்கி தர வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
💥நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டியில் தோட்டத்தில் தண்ணீர்பாய்ச்சுவதில் அண்ணன் தம்பிக்குள் தகராறு அண்ணன் ராமர் வெட்டியதில் தம்பி ராமசுப்பையா மருத்துவமனை கொண்டுவரும் வழியில் சாவு.
💥ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு மராட்டிய மாநில தமிழர்கள் 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
💥கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே ஸ்கூட்டரில் சென்ற தனியார் கல்லூரி பேராசிரியர் ராஜேஸ்வரியிடம் 3 பேர்கொண்ட கும்பல் வழிமறித்து நகையை பறிக்க முயற்சி,  ஆட்கள் வந்ததால் ராஜேஸ்வரியை தாக்கி விட்டு மர்ம கும்பல் தப்பியோட்டம், படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி,