உயிருக்கு போராடியவரிடம் செல்போன் திருடிய மனிதர்: கண்டுகொள்ளாத மக்கள்!

Must read

160811101212_india_accident_512x288_bbc_nocredit

டில்லி:
ந்தியத் தலைநகர் டில்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலை ஒன்றில்,  வேன் மோதி விபத்துக்குள்ளான  ஒரு இளைஞர்,  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடியும் யாரும் அவருக்கு உதவாததால் பரிதாபகரமாக மரணமடைந்தார்.
இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித் தள்ளிய பிறகு வேன் ஓட்டுநர் வெளியே வந்து பாதிப்புக்குள்ளான  இளைஞரை பார்க்கிறார். பிறகு  தனது வாகனத்தை  ஏறி கிளம்பிவிடுகிறார்.
பிறகு  அந்த வழியாக வந்த ஒருவர்  அடிப்பட்டு கிடப்பவரை நெருங்குகிறார். ஆனால் காப்பாற்றவில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரிடம் இருந்து  அவரது  கைப்பேசியை திருடிச் செல்கிறார்.
160811101707_delhi_accident_512x288_bbc_nocredit
பலநூறு பேர், அடிபட்டவரை பார்த்தபடியே கடந்து செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் இருந்த வீடியோ, மனிதர்களின் மனநிலை குறித்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இரவுப்பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது சாலையில் விபத்துக்குள்ளான அந்த நபருக்கு உதவ யாருமின்றி, உயிரை விட நேர்ந்திருக்கிறது.
யாருமே உதவத் தயாராக இல்லாத, மனிதநேயமற்ற மனநிலை, இந்தியாவில் பெரும் விவாவதத்தைக் கிளப்பி உள்ளது.
 

More articles

Latest article