புதுடெல்லி:

மக்களுக்கு மத்திய அரசு நலத்திட்டங்களுக்காக செலவிடும் தொகையை விட முகேஷ் அம்பானியிடம் அதிக பணம் உள்ளதாக  ‘ஆக்ஃபாம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் ஆக்ஃபாம் அமைப்பு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையின் ஒரு பகுதியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க துணைக் கண்டத்தை விட இந்தியாவின் ஏழை மாநிலங்களில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம் உள்ளது.

அமெரிக்காவை பொருத்தவரை,கடந்த 10 ஆண்டுகளாக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, 2017-2018 வரை 2 நாட்களுக்கு ஒரு முறை புதிய கோடீஸ்வரர் உருவாகியிருக்கிறார்.

ஏழைகளுக்காக பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்யும்போது, இந்தியாவில் சமச்சீரற்ற தன்மை அதிகரித்து வருவது தெரிகிறது.
இந்தியாவில் மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு ஆகும் செலவுத் தொகையை விட, தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் அதிக தொகை உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.