சென்னை

போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி தனது இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இதற்கு உதவி வருகின்றன.

இந்த முகாம்கள் மூலம் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் இன்று மீடும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 43,061 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சொட்டு மருந்து அளிக்கும் முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து இன்று காலை தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் கிரிஜா வைத்யநாதன் ஆகியோரும் விழாவில் பங்கு பெற்றனர்.

இன்று பயணம் செய்யும் குழந்தைகளில் நலனுக்காக ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் 1652 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணம் செய்வோரின் நலனுக்க்காக இவை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

[youtube-feed feed=1]