மதுரை,
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது, அவர்கள்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.
புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும், 7-வது ஊதியக்குழு வின்பரிந்துரையை அமல் படுத்த வேண்டும்உள்பட 4 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர்கள், அரசுஊழியர்கள்
இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காமல், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரையைசேர்ந்தவக்கீல்சேகரன்என்பவர்மதுரைஐகோர்ட்டில்மனுதாக்கல்செய்தார்.
இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.ஆனால், கோர்ட்டு தடையைமீறிபோராட்டம் நடைபெற்றது. இதனால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அதனால், ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு சார்பாக தலைமை செயலாளரை கோர்ட்டுக்கு வரவழைத்து கருத்து கேட்கப்படும்,போராட்டத்தைவாபஸ்பெற்றுஉடனடியாகவேலைக்கு திரும்ப வேண்டும் என்றும், திரும்பாவிட்டால் கடும்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
அதன் காரணமாக போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் 21-ந்தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்
12.30 மணியளவில் வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன், ஜாக்டோ-ஜியோ சார்பில் மூத்த வக்கீல் பிரசாத் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் வாதாடுகையில், 7-வது ஊதியக்குழு பரிந்துரை கமிட்டி அறிக்கையைவருகிற 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்யஉள்ளோம்.
கமிட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதிய நிர்ணயம் நவம்பர் மாதத்திற்குள் அமுல் படுத்தப்படு ம்எனஎதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். தற்போது 7-வதுஊதியக்குழு பரிந்துரைத்த 3 மாதங்களிலேயே அதனை அமல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
பழைய ஓய்வூதியதிட்டத்தில் தற்போதைய ஊழியர்களையும் சேர்க்கவேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகுறித்து கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனை பெற்றபின்னர்தான் அரசு முடிவுசெய்யும். அதற்கு காலதாமதங்களும் ஆகலாம்என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்கப்படுமா? என்று கேள்விஎழுப்பினர்.
இதற்கு அட்வகேட் ஜெனரல் கூறுகையில், இது தொடர்பாக தற்போது எந்த உறுதியையும் அளிக்க முடியாது என்றார்.
இதனைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ சார்பில் வக்கீல் பிரசாத் வாதாடுகையில், தமிழக அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்துவருகிறது. மத்திய அரசு ஊதியக்குழு கமிட்டியை உடனுக்குடன் அமுல்படுத்துகிறது. மற்ற மாநிலங்களு ம்விரைந்து நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால் தமிழகம் தாமதம் செய்கிறது என்று வாதிட்டார்.
இருதரப்புவா தங்களையும் கேட்ட நீதிபதிகள் ஊதியக்குழு அறிக்கையை அமல் படுத்தசரியானகால அளவு குறித்து ஆலோசனை நடத்திதெரிவிக்கு மாறு அரசுதரப்பிடம் கூறினர்.
தொடர்ந்துவழக்கைபிற்பகல் 2.15 மணிக்குஒத்திவைத்தன.
பின்னர் பிற்பகலிலும் விசாரணை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நீதிமன்றம் கூறி உள்ள உத்தரவில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எந்தவித துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், அவர்களின் சம்பளங்களை பிடித்தம் செயய்யக்கூடாத கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் போராட்டம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அந்த நாட்களுக்கான பணியை ஈடு செய்ய வேண்டும் என்றும் கூறி உளளது.