சென்னை,

தமிழக மாணவர்கள் எந்த தேர்வை யும்எதிர் கொள்ளும் வகையில் புதியபாடத்திட்டம் அமையும் என்று தமிழகபள்ளிக்கல் வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிஇருந்தார்.

இந்நிலையில் எந்தெந்த வகுப்புகளுக்கு எந்த கல்வி ஆண்டில் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 20ந்தேதி நடைபெற்ற புதியபாடத்திட்டகருந்தரங்கில் பேசும்போது பாடத்திட்டங்கள் மாற்றுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்திருந்தார்.

அப்போது கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதாகவும் மத்திய அரசு கொண்டு வரும் போட்டி த்தேர்வுகளை சந்திக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரஇருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 2018 – 19 கல்வியாண்டில்முதல் கட்டமாக1, 6, 9,11ம்வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருக்கிறது.

இரண்டாவது கட்டமாக மாற்  2019 – 20ம் கல்வி ஆண்டில்  2, 7, 10,12ம்வகுப்புகளுக்கும்,

மூன்றாவது கட்டமாக 2020 – 21 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8ம்வகுப்புகளுக்குபாடத்திட்டங்கள்மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி தற்போது நடைபெற்று வரும் கல்வி ஆண்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்து வெளியே வரும் மாணவ மாணவிகள் அடுத்த ஆண்டும் நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும் நிலையே நீடித்து வருகிறது.