சென்னை,
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து மனுதாக்கல் செய்ய வந்தபோது அதிமுகவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்ய பொதுக்குழு நாளை நடைபெற இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க ஜெயலலிதாவின் தோழி சசிகலா மறைமுகமாக முயற்சி செய்து வருகிறார்.
ஆனால், இதை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த சசிகலாபுஷ்பா எம்.பி. போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவி போட்டிக்கு சசிகலாபுஷ்பா சார்பில் மனு அவரது வக்கீல்கள் அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர்.
இதையடுத்து தலைமை கழகத்தில் அங்கிருந்த தொண்டர்களுக்கும் சசிகலாபுஷ்பா வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சசிகலா புஷ்பாவின் வக்கீல்கள் தாக்கப்பட்டனர். இதன் காரணமாக தொண்டர்களுக்கிடையேயும் மோதல் நீடித்தது.
போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து சசிகலாபுஷ்பா ஆதரவாளர்களை அங்கிருந்து மீட்டு சென்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
சசிகலா புஷ்பா சார்பில் அவரது வக்கீல்கள் பொதுச்செயலாளர் போட்டிக்கு மனு தாக்கல் செய்ய வந்த போது, அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் கலவரம் வெடித்தது.
சசிகலா புஷ்பா வழக்கறிஞர் படுகாயம். தொண்டர்கள் மோதல்
தலைமை அலுலவகத்தில் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்!