முதல்வர் பழனிசாமி, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வரும் பொங்கலுக்குள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்நிலையில் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், `ரூ.750 கோடி வழங்குவதில் எந்த பலனும் இல்லை. ஊழியர்களின் காரனி குறித்து எதுவும் கூறவில்லை. ஆகவே வேலை நிறுத்தம் தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாளையிலிருந்தாவது பேருந்துகள் முழு அளவில் இயங்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
“போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்” என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.