kkk

டத்தை ரிலீஸ் செய்து ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குமோ என்று திரையுலகினர் பயந்த காலம் போய், படத்தை ரிலீஸ் செய்யவே முடியுமா இல்லையா என்கிற பயம் வந்து ரொம்ப நாளாகிறது.

உகல நாயகன் கமல், இளய தளபதி விஜய் என பெரிய நடிகர்களும் இதற்கு தப்பவில்லை. “எப்போது எந்த அமைப்பு நமது படத்துக்கு தடை விதிக்குட என்ற அச்சத்துடனேயே பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அப்படி ஏதாவது ஒரு குழு படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டால், உடனே பேச்சவார்த்தை, சமாதானம் என்று நாட்கள் நீண்டு பட ரிலீஸ் தள்ளிப்போகும் கொடுமையும் நடந்தது. இதனால் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து படம் எடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கமுடியாமல் திண்டாடிய தயாரிப்பாளர்களும் உண்டு.

இந்த நிலையில்தான் “படத்துக்கு தடை விதிப்போம்” என்ற ஒரு குருப்பை வெளிப்படையாக எதிர்த்திருக்கிறது திரையுலகம்.

விசயம் இதுதான்.

எஸ் சண்முகம் தயாரிப்பில் ஆர்.,வி. ஆர். இயக்கியுள்ள திரைப்படம், ” அஞ்சுக்கு ஒண்ணு ”. இந்த திரைப்படத்தில் சித்தாள் பணி புரியும் பெண்களை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி, அந்த படத்தை வெளியிட விடமாட்டோம் என்றும் கட்டிட தொழிலாளர்களுக்கான சங்கம் நடத்தும் பொன். குமார் அறிக்கைவிட்டிருந்தார்.

வழக்கம்போல படக்குழுவினர், சம்பந்தப்பட்ட நபரை சந்தித்து, படத்தின் காட்சி பற்றி விளக்குவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் இந்த படத்தின் இயக்குநர் ஆர்.வி.ஆர். மற்றும் தயாரிப்பாளர் சண்முகம் ஆகியோர் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் என திரையுலக சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்கள். அதோடு, நேற்று பத்திரிகையாளர்கல் கூட்டத்தை கூட்டினார்கள்.

அப்போது “உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சித்தாள் பெண்மணிகளை உயர்வாகத்தான் எங்கள் படத்தில் காண்பித்திருக்கிறோம். படத்தையே பார்க்காமல் எதற்காக பொன். குமார் பொய் சொல்ல வேண்டும்? தன்னுடைய சுய விளம்பத்திர்காக திரைப்படத்தை விமர்சிக்கிறாரா?இல்லை தயாரிப்பாளரை மிரட்டி லாபம் தேட முயலுகிறாரா?

இப்படியே ஆளுக்கொரு அமைப்பு வைத்துக்கொண்டு, நியாயமான காரணமே இல்லாமல் படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் திரைப்படத்துறையின் நிலை என்ன? திரைப்பட துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலைமை என்ன? இத்தொழிலை நம்பி பணம் முதலீடு செய்யும் முதலாளியின் நிலை என்ன?

தேவையின்றி எங்கள் படத்தை தவறாக விமர்சித்த பொன்.குமாருக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று விளாசித் தள்ளிவிட்டார்கள் இருவரும்.

இவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக திரைத்துறை சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து பேசவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இன்னொரு புறம், பொன். குமாருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் முயற்சியும் நடக்கிறதாம்.

“எப்டியோ.. படங்களை பார்க்காமலே எதிர்த்து அறிக்கைவிட்டு டென்சன் ஏற்றும் பேர்வழிகளுக்கு மணி கட்டியிருக்கிறார்கள்.. அதுவரை நல்லது” என்கிறது திரையுலகம்.