நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு புலிக்குட்டிகளை தத்தெடுத்தார்.

ஆர்த்தி, ஆதித்யா என்ற இரண்டு புலிக்குட்டிகளின் ஆறு மாதத்திற்கு தேவையான பரிமாரிப்பு செலவாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அவர் பூங்காவிற்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்க முடியும் என தெரியவந்தது. பிரபலங்கள் விலங்குகளை தத்தெடுத்தால், பலர் விலங்குகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுவார்கள். புலிகளுக்கு தேவையான ஆறு மாதத்துக்கான பராமரிப்பு செலவு ரூ.5 லட்சத்தை நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளேன் என கூறினார்
Patrikai.com official YouTube Channel