சென்னை:

ர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிம்பு-அனிருத் ஆபாச பாடலுக்கு எதிர்ப்பு   தெரிவித்து சென்னையில் சிம்பு வீட்டை மகளிர் அமைப்புகள் முற்றுகையிட்டர். அப்போது சில பெண்கள், “அந்த அருவெறுப்பான பாடலை எழுதிய டி.ராஜேந்தரையும் கைது செ்யய வேண்டும்” என்று கூறினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிம்பு பாடிய அருவெருப்பான பீப் பாடல் சமூக வலைத் தளங்களில் பரவியது. இதையடுத்து பாடலைப் பாடிய சிம்வுக்கும், இசை அமைத்ததாக கூறப்பட்ட அனிருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் சிம்பு, “நான் பாடியது என் விருப்பம். இது போல இன்னும் 150 பாடல்கள் உள்ளன” என்று பேசினார். இதனால் அவருக்கு மேலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் உள்ளது என்று சிம்புவுக்கும்,அனிருத்துக்கும் கண்டனம் தெரிவித்து,கோவை,தூத்துக்குடி,சேலம்,கோவில்பட்டி என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மகளிர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில அமைப்புகள், சிம்புவின் உருவ பொம்மையை எரித்தன.

மேலும் கோவை போலீசாரிடம் மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிம்புவிற்கும், அனிருத்திற்கும் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டு முன்பு இன்று காலை மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கையில், சிம்புவை கைது செய்ய வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெண்கள், சிம்புவின் படத்தை கிழித்தும், கொளுத்தியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். “ சிம்புவையும், அனிருத்தையும் விரைவில் கைது செய்ய வேண்டும். பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உருவாகும் பாடல்களை தடை செய்ய வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தி முழக்கம் இட்டார்கள்.

சிலர், “அந்த ஆபாச பீப் பாடலை எழுதிய டி.ராஜேந்தரையும் கைது செய்ய வேண்டும்” என்றார்கள். இவர்கள் இப்படி பேசியது தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

அந்த ஆபாச பீப் பாடலை தான் எழுதியதாக சிம்பு  கூறினார். “யாரோ  எழுதி சிம்பு குரலில் பாடிவிட்டார்கள்” என்றார் டி.ராஜேந்தர். இந்த நிலையில் இப்படி ஒரு கருத்து கிளிம்பியிருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.